தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அங்கக பண்ணையக் கட்டணப் பயிற்சி
கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் 11.04.2023 அன்று ஒரு நாள் கட்டணப் பயிற்சியை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர், முனைவர் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ஒரு நாள் கட்டணப் பயிற்சியில் அங்கக வேளாண்மையில் பூச்சி நோய் கட்டுப்பாடு, களை மேலாண்மை, சத்துக்கள் மேலாண்மை மற்றும் அங்கக வேளாண் விளைபொருட்களை சந்தைப்படுத்துதல் பற்றிய தகவல்கள் தரப்படுவதோடு, அங்கக இடுபொருள் தயாரிப்பு முறைகளும் செய்முறைப் பயிற்சியாக கொடுக்கப்படும். அங்கக வேளாண்மை பற்றிய புத்தகம் ஒன்றும் வழங்கப்படும்.
ஒருவருக்கான கட்டணம் வரி உட்பட ரூபாய் 590 ஆகும் பயிற்சியில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்வதற்கும் மற்றும் தகவல்களுக்கும் மையத்தின் பேராசிரியர் இராம சுப்பிரமணியனை 9486734404 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.