புதிய பயிர் இரகங்கள் வெளியீடு 2021
தமிழக விவசாயப் பெருமக்களின் வாழ்க்கைத் தரம் உயர, அவர்களின் தேவையை அறிந்து, ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பல புதிய பயிர் இரகங்களை வெளியிட்டு வருகிறது. இவ்வருடம் 2021 ஆம் ஆண்டு பொங்கல் பரிசாக அளிக்க 11 புதிய இரகங்களை வேளாண் மற்றும் தோட்டக்கலை விவசாயிகளுக்காக வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாட் வேளாண்மை பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வருடம் 2021 ஆம் ஆண்டு பொங்கல் பரிசாக அளிக்க 11 புதிய இரகங்களை வேளாண் மற்றும் தோட்டக்கலை விவசாயிகளுக்காக வெளியிடுகிறது. இந்தப் பயிர் இரகங்களை வேளாண்மைத்துறை முதன்மை செயலர், வேளாண்மைத்துறை இயக்குநர், தோட்டக்கலைத்துறை இயக்குநர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பல அதிகாரிகள் முன்னிலையில் 51-வது மாநில பயிர் இரகங்கள் வெளியீட்டுக் குழுவால் அங்கிகரிக்கப்பட்டு, குழுவின் ஒப்புதலுடன் அரசுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இதில் வேளாண் பயிர்கள் ஆறும் தோட்டக்கலைப் பயிர்கள் நான்கும் மற்றும் வனப்பயிர் ஒன்றும் அடங்கும்.
- நெல் – கோ 54
- நெல் – ஏடிடீ 55
- நெல் – டிஆர்ஒய் 4
- கேழ்வரகு ஏடிஎல் 1
- வரகு ஏடிஎல் 1
- உளுந்து கோ 7
- விஎம்ஆர் (கத்திரி) 2
- பாலில்லா பழா பிஎல்ஆர் 3
- குடம்புள்ளி பிபிஐ(கு) 1
- விளாம்பழம் டபில்யுஎப்எல் 3
- மலைவேம்பு எம்டிபி 3
நெல் – கோ 54
புதிய நெல் இரகங்களில் கோ 54 தமிழ்நாட்டின் சொர்ணாவாரி, கார், குறுவை மற்றும் நவரை பருவங்களில் வளரக்கூடிய குறுகிய கால (110 – 115 நாட்கள்) இரகமாகும். இதன் மகசூல் 6400 கிலோ , ஹெக்டேர். மத்திய சன்ன அரிசி கொண்ட இந்த இரகம் சமைப்பதற்கு மிகச் சிறந்தது. தமிழ்நாட்டின் குறுவை மற்றும் ஏனைய பருவங்களுக்கு ஏற்றது.
நெல் – ஏடிடீ 55
இரண்டாவது நெல் இரகம் எடிடீ 55 கார், குறுவை மற்றும் கோடை பருவத்திற்கு மிகவும் ஏற்ற இரகமாகம். இந்த குறுகிய கால இரகத்தின் (115 நாட்கள்) மகசூல் 6000 கிலோ , ஹெக்டேர். இது பாக்டீரியல் கருகல் நோய்க்கு மிதமான எதிர்ப்பு திறன் கொண்டது. சன்ன அரிசியை கொண்ட இந்த இரகம் சமைப்பதற்கு நல்ல இரகமாகும். இந்த இரகம் பாக்டீரியா இலையுறை கருகல் நோய் பாதிக்கும் பகுதிகளுக்கு குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமாp மற்றும் நோய் பாதிக்கும் ஏனைய பகுதிகளுக்கும் ஏற்றது.
நெல் – டிஆர்ஒய் 4
மூன்றாவது நெல் இரகம் டிஆர்ஒய் 4. இது களர் மற்றும் உவர் நிலங்களுக்கு மிகவும் ஏற்றது. இந்த மத்திய கால (125 – 130 நாட்கள்) இரகம். சம்பா, தாளடி மற்றும் பின்சம்பா பருவங்களுக்கு ஏற்றது. இதன் மகசூல் 5800 கிலோ , ஹெக்டேர். மத்திய சன்ன அரிசியை கொண்ட இந்த இரகம் சமைப்பதற்கு ஏற்றது. பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு மிதமான எதிர்ப்புதிறன் கொண்டது.
கேழ்வரகு ஏடிஎல் 1
சிறுதானிய பயிர் கேழ்வரகு எடிஎல் 1 இரகம் இறவையில் ஹெக்டேருக்கு 3130 கிலோவும் மானாவாரியில் 2900 கிலோவும் கொடுக்கவல்லது. குறுகிய வயதை கொண்ட (110 நாட்கள்) இந்த இரகம் குலை நோய்க்கு மிதமான எதிர்ப்பு திறன் கொண்டது. சாயாமல் முதிர்வடையும் தண்டு திறனும், கதிரில் தானியங்கள் எளிதாக பிரியும் தன்மையாலும் இயந்திர அறுவடைக்கு ஏற்றது. தமிழ்நாட்டின் கேழ்வரகு பயிரிடப்படும் அனைத்து பகுதிகளுக்கும் ஏற்றது.
வரகு ஏடிஎல் 1
இரண்டாவது சிறு தானிய இரகமான வரகு எடிஎல் 1 வறட்சியை தாங்கி வளரும் தன்மை கொண்டது. இந்த இரகம் 110 நாட்கள் வயதுடையது. ஹெக்டேருக்கு 2500 கிலோ என்ற அளவில் தானிய மகசூலும் 4400 கிலோ என்ற அளவில் தட்டை மகசூலும் கொடுக்கவல்ல ஒரு உயர் விளைச்சல் இரகமாகும். உறுதியான தண்டுகள் கொண்டு முதிர்ச்சியில் சாயாமல் இருப்பதால், இயந்திர அறுவடைக்கு ஏற்றது. இந்த இரகம் தமிழ்நாட்டில் கரிசல் மண் கொண்ட பகுதிகளுக்கு ஏற்றது.
உளுந்து கோ 7
பயிறு வகைகளில் உளுந்து கோ 7 எனற இரகம் ஆடி மற்றும் புரட்டாசி பட்டத்திற்கு ஏற்றது. இந்த இரகம் 60 முதல் 65 நாட்களுக்குள் முதிர்ச்சிடைந்து ஹெக்டேருக்கு 880 கிலோ என்ற அளவில் மகசூல் கொடுக்கவல்லது. பருமனான விதையுடையது. குறிப்பாக மஞ்சள் தேமல் நோய்க்கு எதிர்ப்பு திறன் கொண்டது. தமிழ்நாட்டின் கன்னியாகுமாp மற்றும் நீலகிரி தவிர அனைத்து மாவட்டங்களுக்கும் ஏற்றது.
விஆர்எம் (கத்திரி) 2
காய்கறி பயிர்களில் விஆர்எம் (கத்திரி) 2 என்ற இரகம் 140 நாட்கள் வயதுடையது. காய்கள் அடர் ஊதா நிறத்துடன் அடிப்பகுதியில் பச்சை புள்ளிகள் கொண்டிருக்கும். காயின் எடை 100 – 150 கிராம். செடிக்கு 2 முதல் 2.5 கிலோ வரை மகசூல் மற்றும் ஹெக்டேருக்கு சுமார் 50 டன் மகசூல் கொடுக்கும் திறன் கொண்டது. குறிப்பாக முள்ளில்லா தன்மை கொண்டதால் காயின் தரம் காத்தல், அறுவடை, பின் அறுவடை மதிப்பு கூட்டுதல் மற்றும் தொலைதூர விற்பனைக்கு ஏற்றது. தமிழ்நாட்டில் வேலு}ர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு சாகுபடி செய்ய சிறந்த இரகமாகும்.
பலாபழம் பிஎல்ஆர் 3
பழவகைகளில் முதலாவதாக பிஎல்ஆர் 3 என்ற பல வருட இரகமான பாலில்லா பலா இரகம் சூலை முதல் டிசம்பர் வரை மகசூல் கொடுக்கும். இதன் பழம் சுமார் ஐந்து கிலோ அளவில் மரத்திற்கு சுமார் 200 பழங்கள் வரை காய்க்கும். பலா காய் மற்றும் பழங்களில் மிகக் குறைந்த பால் தன்மை காணப்படும். பழங்களில் அஸ்கார்பிக் அமிலம் கிராமுக்கு 4.35 மிகி என்ற அளவில் இருக்கும். சுலைகள் நல்ல இனிப்பு தன்மை கொண்டவை. வீட்டு தோட்டத்திலும், வணிக ரிதியாகவும் பயிரிட ஏற்ற இரகமாகும்.
குடம்புள்ளி பிபிஐ (கு) 1
பழப்பயிர்களில் இரண்டாவதாக குடம்புள்ளி பிபிஐ (கு) 1 என்ற பல வருட பழப்பயிர் இரகம் சமையலுக்கு ஏற்றது. காய்கள் புளிப்பு தன்மை கொண்டிருக்கும். மரத்திற்கு சராசரியாக 750 பழங்கள் வீதம் 120 கிலோ மகசூல் கொடுக்கவல்லது. முதிர்ந்த பழத்தில் ஹைட்ராக்சி சிட்ரிக் அமிலம் 20.67 என்ற சதவீதத்தில் உள்ளது. இந்த அமிலம் உடல் பருமனைக் குறைக்கும் தன்மைக் கொண்டது. மருந்துகளுக்கு மூலப்பொருளாகவும் பழத்தின் சாறு உணவைக் கெடாமல் பாதுகாக்கும் வேதிப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. மரத்திற்கு 120 கிலோ மகசூல் கொடுக்கவல்ல இந்த இரகம் அதிக மழை பெய்யும் பகுதிகள் (வருடத்திற்கு ; 750 மிமீ) மற்றும் கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் உயரம் வரை உள்ள பகுதிகளில் சாகுபடி செய்ய ஏற்ற இரகமாகும். வீட்டு தோட்டத்திலும், வணிக ரிதியாகவும் பயிரிட ஏற்ற இரகமாகும்.
விளாம்பழம் (டபில்யு எப்எல்) 3
10. மூன்றாவதாக, விளாம்பழம் (டபில்யு எப்எல்) 3 என்ற பல வருட பழப்பயிர் இரகம் மரத்திற்கு 140 கிலோ என்றளவில் மகசூல் கொடுக்கவல்லது. பழங்கள் பெரிய அளவில் 450 கிராம் எடைக்கொண்டு சிறந்த மணத்துடன் குறைவான புளிப்பு மற்றும் நல்ல இனிப்புடன் இருக்கும். புரதச்சத்து, பொட்டாசியம், கால்சியம் மற்றும் ஆண்டி-ஆக்ஸிடன்ட் (உடல் திறன் காக்கும்) அதிக அளவில் கொண்டுள்ளது. தமிழகத்தில் தரிசு, களர் மற்றும் உவர் நிலங்களுக்கு ஏற்ற பழப்பயிராகும். மரத்திற்கு சராசரியாக 300 பழங்கள் வீதம் ஹெக்டேருக்கு 28 டன்கள் மகசூல் கொடுக்கும். வீட்டு தோட்டத்திலும், வணிக ரிதியாகவும் பயிரிட ஏற்ற இரகமாகும்.
மலைவேம்பு எம்டிபி 3
இறுதியாக, வனப்பயிர்களில் மலைவேம்பு எம்டிபி 3 என்ற வனப்பயிர் வேகமாக வளரக்கூடிய இலையுதிர் மரமாகும். குறிப்பாக, இது முகப்பு மரத்தகடு (0.4 மிமீ) உற்பத்திக்காக வெளியிடப்படும் முதல் இரகமாகும். இந்த மரம் நேராக வளரும் தன்மை கொண்டு (15 மீட்டர்) 8 முதல் 10 வருடங்களுக்குள் அறுவடை செய்ய ஏற்றது. ஒரு மரத்திற்கு 500 – 700 கிலோ வீதம் ஹெக்டருக்கு 50 – 70 டன்கள் மகசூல் கொடுக்கவல்லது. வேளாண் காடுகளாக வளர்க்கும் போது வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களை ஊடுபயிராக வளர்க்கலாம். வேளாண் காடுகள் மூலம் உழவாpன் வருமானத்தை ஈட்ட இது ஒரு சிறந்த மூலப்பயிராகும். தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களுக்கும் குறிப்பாக பாசன வசதி பெற்ற நிலங்களுக்கு இந்த இரகம் ஏற்றது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர். நீ. குமார் அவர்கள் கூறுகையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்லைக்கழகம் கடந்த நூறு வருடங்களில் 854 இரகங்களை வெளியிட்டுள்ளது. இந்த வருடம் பதினொரு புது இரகங்களை வௌ;வேறு வானில மண்டலங்களுக்கும் ஏற்றவாறு வெளியிடப்பட்டுள்ளது. விவசாயிகள் இந்த புது இரகங்களை பயிரிட்டு நன்மைகளை பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நன்றி:கிருஷி ஜாக்ரன்