குறைந்த செலவில் சோளம் அறுவடை செய்ய வாய்ப்பு
தமிழகத்தில் தற்போது பரவலாக சோளம், எள்ளு, ராகி, நெல் அறுவடை நடந்து கொண்டிருக்கும் நிலையில் கூலியாட்கள் பற்றாக்குறை மற்றும் அதிக செலவினத்தை கணக்கில்கொண்டு டிராக்டர் உடன் இணைந்த சோளத்தட்டை அறுவடை செய்யும் இயந்திரம் வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வழங்கப்படுகிறது.
ஒரு நாளில் 10 முதல் 15 ஏக்கர் வரை அறுவடை செய்யும் இந்த இயந்திரம் தரையிலிருந்து ஒன்றரை அடி உயரத்தில் தடைகளை வெட்டி ஒருபுறமாக சீராக சாய்த்து போடுகிறது. இதன் மூலம் சோளத்
தட்டைகளை குறைந்த ஆட்களைக் கொண்டு எளிதாக கட்டி அடுக்கி வைக்க முடியும்.
ஒரு மணி நேரத்திற்கு
ரூ.340/- ரூபாய் என்ற குறைந்த வாடகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அருகில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களில் இந்த கருவியினை முன்னுரிமை அடிப்படையில் வாடகைக்கு பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு:
பிரிட்டோராஜ்
வேளாண் பொறியாளர்
9944450552.