தேங்காய் மற்றும் கொப்பரைக்கான விலை முன்னறிவிப்பு
விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தில், தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இயங்கி வரும், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவுப்புத் திட்டம், கடந்த 10 ஆண்டுகளாக ஈரோட்டில் உள்ள அவல் பூந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலவிய தேங்காய் மற்றும் கொப்பரை விலையினை ஆய்வு செய்தது. மேலும் பெருந்துறை வேளாண் உற்பத்தி கூட்டுறவு விற்பனை மையத்தில் சந்தை ஆய்வுகளும் மேற்கொள்ளபட்டது. ஆய்வு முடிவின் அடிப்படையில் ஆகஸ்ட் முதல் செப்டம்பர்’ 2020 வரை தரமான தேங்காயின் பண்ணை விலை ரூ.14 முதல் 15 வரை இருக்கும் மற்றும் நல்ல தரமான கொப்பரை கிலோவுக்கு ரூ.90 முதல் ரூ. 95 வரை இருக்கும். எனவே, எனவே, விவசாயிகள் மேற்குறிய சந்தை ஆலோசனை அடிப்படையில், விற்பனை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர். மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையம் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்- 641 003 தொலை பேசி – 0422 – 2431405
வேளாண்மை துறை
Coconut. Deley rate place send