பருத்திக்கான விலை முன்னறிவுப்பு
பருத்தி விற்பனை மற்றும் விதைப்பு முடிவுகளை எடுக்க ஏதுவாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தின், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவுப்புத் திட்டம் கடந்த10 ஆண்டுகளாக கொங்கனாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில் நிலவிய பருத்தி விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. விற்பனை முடிவுகள் ஆய்வுகளின் அடிப்படையில் தரமான பருத்தியின் பண்ணை விலை (ஜூலை முதல் செப்டம்பர்’2020) குவிண்டாலுக்கு ரூ.4000 முதல் ரூ.4200 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் மேற்கொண்ட விலையின் அடிப்படையில் விற்பனை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது. விதைப்பு முடிவுகள் தற்போதைய நிலை தொடர்ந்தால், பருத்தி ஆலையாளர்கள் கொள்முதல் செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆகஸ்ட் மாத விதைப்பு பருத்தியின் விலை அறுவடையின் போது குவிண்டாலுக்கு ரூ.4200 முதல் ரூ.4400 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, கோவிட்-19 ஊரடங்கிற்கு பிறகு ஏற்றுமதி தேவை அதிகரிக்க தொடங்கினால் பருத்தி விலை அதிகரிக்கும். விவசாயிகள் மேற்கொண்ட விலையின் அடிப்படையில் விதைப்பு முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையம் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்- 641 003 தொலை பேசி – 0422 – 2431405
வேளாண்மை துறை