நீரா பானம்
தென்னிந்திய அளவில் தென்னை உற்பத்தி 90 சதவீதம் நடக்கிறது. தென்னையின் மண் பானையில் இருந்து நேரடியாக இறக்கப்படும் இனிப்பான ஒரு பானம் தான் ‘நீரா’ ஆகும். இதில் நுண்ணுாட்டச் சத்துக்கள், மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளதால் உடல் நலத்துக்கு ஏற்ற பானமாக விளங்குகிறது.
நீராவை இறக்குவதில் இருந்து, நீரா உற்பத்தி செய்தால், தென்னை சாகுபடி அதிக லாபம் தரும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் நீரா உற்பத்தி இன்னும் முக்கியத்துவம் பெறவில்லை.
நீரா ஒரு சுவையான நலம் தரும் பானம் என்பது மட்டுமல்ல, இதில் இயற்கையான சர்க்கரை, அமினோ அமிலங்கள், வைட்டமின் சி மற்றும் பி., நிகோட்டின் அமிலம், நைட்டிரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், மங்கனீஷியம், சோடியம், குளோரின், இரும்பு, ஜிங்க் ஆகிய தாது உப்புக்கள் அதிகம் உள்ளது.
நீரா சிரப், தென்னை வெல்லம், வெல்ல நீர், நீரா தேன், தென்னை சர்க்கரை உள்ளிட்டவைகளை மதிப்புக்கூட்டி விற்கும் போது கை நிறைய லாபம் கிடைக்கிறது.
தென்னை வளர்ச்சி வாரிய பணிகள் பற்றி அறிய www.coconetboard.gov.in.
நன்றி:தினமலர்