வரும் 23, 24ம் தேதிகளில் திருச்சியில் வாழை மெகாத் திருவிழா திருச்சி
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் நடத்தும் “வாழை மெகாத் திருவிழா” வருகிற பிப்ரவரி 23 மற்றும் 24-ம் தேதிகளில் (இரண்டு நாட்கள்) திருச்சி கலையரங்கம் வளாகத்தில் (திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில்) நடைபெறவிருக்கிறது. இதில், கிட்டத்தட்ட 300 வகையான வாழைத்தார்கள் கண்காட்சியாக இடம் பெற உள்ளன. மேலும் இக்கண்காட்சியில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் வேளாண் இடுபொருள் மற்றும் வாழையில் வர்த்தக / ஏற்றுமதி / மதிப்புகூட்டுதல் சம்பந்தமான கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வாழை விவசாயிகள், விற்பன்னர்கள், தொழில் முனைவோர்கள், மாணவர்கள், அகில உலக வாழை விஞ்ஞானிகள் என கிட்டத்தட்ட 10000 பேர் பங்கு பெற்று பயனடைய உள்ளனர். இதில் பொது மக்களும் வந்து பயனடையலாம். அனுமதி இலவசம். தாங்கள் தங்களின் வாழை விவசாய நண்பர்களுடன் இதில் கலந்து கொண்டு இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.
நன்றி:அக்ரி டாக்டர்