காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பு தமிழ்நாடு வேளாண் பல்கலை. பரிந்துரை
தக்காளி
மத்தியபிரதேசம், ஆந்திரபிரதேசம், கர்நாடகம், தெலுங்கான, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் தக்காளி அதிகளவு பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகியவை தக்காளி அதிகம் பயிரிடும் மாவட்டங்களாகும். வர்த்தக மூலங்களின் படி உள்ளூர் வரத்து நீங்கலாக அண்டை மாநிலங்களான ஆந்திரபிரதேசம் மற்றும் கர்நாடகாவின் பங்களிப்பு உள்ளூர் தேவையை பூர்த்தி செய்கின்றன. தற்போது கோயம்பத்தூர் மொத்த விலை சந்தைக்கு தக்காளியின் வரத்தானது அதன் சுற்று வட்டார பகுதிகளான செம்மேடு, கிணத்துகடவு, ஆலந்துறை, நாச்சிபாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து வருகிறது. கடந்த வடகிழக்கு பருவ காலத்தில்; கோயம்புத்தூர் பகுதிகளில் தேவையான அளவு மழை பெற்றுள்ளதால் தக்காளி சாகுபடி பரப்பு அதிகரித்து உள்ளது. கர்நாடகாவிலும் தக்காளி சாகுபடிக்கு சாதகமான மழை பெய்துள்ளது.
கத்தரிக்காய்
கத்தரிக்காய் குளிர் மற்றும் கோடை காலங்களில் அதிகளவு பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருவண்ணாமலை மற்றும் வேலு}ர் ஆகிய மாவட்டங்களில் கத்தரிக்காய் அதிகமாக பயிரிடப்படுகிறது. வர்த்தக மூலங்களின் படி, கத்தரி வரத்தானது நாச்சிபாளையம், ஆலந்துறை, தேனி, ஓசூர் மற்றம் கம்பம் ஆகிய பகுதிகளிலிருந்து வருகிறது. தற்போது கோயம்புத்தூர் சந்தைக்கு தமிழ்நாடு மற்றம் கர்நாடகாவில் (மைசூர்) இருந்து போதுமான வரத்து வருவதாக அறியப்படுகிறது.
வெண்டை
தமிழ்நாட்டில் வெண்டைக்காய் பிப்ரவரி (தைப்பட்டம்) மற்றும் ஜுன் முதல் ஆகஸ்ட் (ஆடிப்பட்டம்) ஆகிய பருவங்களில் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் தலைவாசல், மகுடஞ்சாவடி வட்டாரங்கள், கோயம்புத்தூர் மாவட்டத்தில் காரமடை, பொpயநாயக்கன்பாளையம் மற்றும் தொண்டாமுத்தூர் வட்டாரங்கள், தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி வட்டாரம் மற்றும் திருச்சி மாவட்டத்தில் மையம்பட்டி வட்டாரம் ஆகிய பகுதிகளில் பயிரிடப்படுகிறது. பொதுவாக ஜனவரி முதல் பிப்ரவரி வரையான காலங்களில் வெண்டையின் விலை ஏறுமுகமாகவே காணப்படும். வர்த்தக மூலங்களின் படி வெண்டையின் பெரும்பாலான வரத்தானது ஓசூர், பொள்ளாச்சி மற்றும் உடுமைலைபேட்டை ஆகிய பகுதிகளிலிருந்து கோயம்புத்தூர் சந்தைக்கு வருகிறது.
இச்சூழலில், விவசாயிகள் விதைப்பு முடிவுகளை எடுக்க ஏதுவாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுதிட்டத்தின் கீழ் இயங்கி வரும், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம், ஒட்டன்சத்திரம் சந்தையில் கடந்த 12 ஆண்டுகளாக நிலவிய தக்காளி, கத்திரி மற்றும் வெண்டை விலை மற்றும் சந்தை ஆய்வுகள் மேற்கொண்டது.
ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் அறுவடையின் போது தரமான தக்காளியின் பண்ணை விலை ரூ.18 முதல் ரூ.2,0 வரை, நல்ல தரமான கத்திரி கிலோவுக்கு ரூ.28, முதல் ரூ. 3,0 ஆகவும் மற்றும் தரமான வெண்டையின் பண்ணை விலை ரூ.23 முதல் ரூ.25, வரை இருக்கும் என்று அறியப்படுகிறது. எனவே, விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனைகளின் அடிப்படையில் விதைப்பு முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.
இது குறித்து மேலும் விவரங்களுக்கு, கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம், உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம், தொலைபேசி எண் : 0422-2431405 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தொழில்நுட்ப விவரங்களுக்கு, கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், காய்கறிப் பயிர்கள் துறை, பேராசிரியர் மற்றும் தலைவர், தொலைபேசி எண் : 0422-6611374 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:அக்ரி டாக்டர்