செடி அத்தி சாகுபடியில் அள்ளலாம்
செடி அத்தி சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், கொத்துார் கிராமத்தைச்சேர்ந்த முன்னோடி விவசாயி கே.வெங்கடபதி கூறியதாவது:இந்தியாவில் மஹாராஷ்டிரா, கர்நாடகா, பீஹார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில், செடி அத்தி சாகுபடி செய்யப்படுகிறது.அங்கிருந்து செடிகளை வாங்கி வந்து, என் தோட்டத்தில் நட்டுள்ளேன்.ஒவ்வொரு செடியிலும், ஓர் இலை வரும் போது, ஓர் அத்தி காய்த்து, பழுக்க துவங்கும். அத்தி பழங்கள் பறிக்கும் அளவிற்கு செடிகளை வளர்த்து, கவாத்து செய்தால், ஆண்டு முழுவதும் மகசூல் பெறலாம்.ஒரு ஏக்கருக்கு, ஆண்டுக்கு, 4 டன் வரை பழங்கள் கிடைக்கும். கிலோ, 100 ரூபாய் என வைத்தாலும், 4 லட்சம் ரூபாய் வருவாய் உண்டு.அதே அத்தி பழங்களை, மதிப்பு கூட்டி விற்பனைசெய்தால், இரட்டிப்பு வருவாய்பெறலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்புக்கு: 93829 61000
நன்றி:தினமலர்