1. பஞ்சகவ்யா
பசுமாட்டில் இருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களை மட்டும் பயன்படுத்தி பஞ்சகவ்யா தயாரிக்கப்படுகிறது. 5 கிலோ பசுமாட்டு சாணத்துடன் 500 கிராம் நெய்யைக் கலந்து நன்றாகப் பிசைந்து உருண்டை சேர்த்து 30-50 லிட்டர் அளவு கொண்ட பீப்பாய்க்குள் வைத்து மூடவேண்டும். தொடர்ந்து 3 நாட்கள் சாணம் நெய் கலவை பீப்பாய்க்குள் இருக்கும். நான்காவது நாள் மூடியைத் திறந்து பால், தயிர், இளநீர், பிசைந்த வாழைப்பழம், ஆகிய நான்கு பொருட்களை சாணம், நெய் கலவையினுள் சேர்த்துக் கலக்க வேண்டும். 3 லிட்டர் தண்ணீரில் கலந்து சர்க்கரைத் தண்ணீராக மாற்றி பீப்பாய்க்குள் ஊற்றவேண்டும். நாட்டுச் சர்க்கரையை நேரடியாக சேர்க்கக் கூடாது. தொடர்ந்து 10-வது நாள் வரை தினமும் காலை, மாலை ஆகிய இரண்டு வேளைகள் பீப்பாய்க்குள் இருக்கும் கரைசலை திறந்து கடிகார முள் சுழலும் திசைப் பக்கம் கலக்கி விடவேண்டும். கலக்கிய பின் மூடிவைக்கவேண்டியது முக்கியம். 11-வது நாளில் கள்ளை பீப்பாய் கரைசலுக்குள் ஊற்றித் தொடர்ந்து 7 நாட்கள் இருவேளைக் கலக்கி வர வேண்டும்.19-வது நாளில் பஞ்சகவ்யா தயார். இதைப் பயிர்களுக்கு பயன்படுத்தலாம். பஞ்சகவ்யா கரைசலை 6 மாதம் வரை வைத்திருக்கலாம்
பயனுள்ள தகவல்கள்