பயிற்சிகள் (ஜூன் 2016)
இயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி
இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி
பயிற்சி நாட்கள்: 29-ஜூன் -2016
தேனீ வளர்ப்பு தொழிற்நுட்ப பயிற்சி
இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி
பயிற்சி நாட்கள்: 28-ஜூன் -2016
காளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி
இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி
பயிற்சி நாட்கள்: 21-ஜூன் -2016
தொடர்பு எண்:04285241626
10-ஜூன் -2016 முதல் முன் பதிவு செய்யப்படும்
நன்மை செய்யும் பூச்சிகள் வளர்ப்புக் குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பு கோவை, வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி:
பயிர்களில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும் காரணிகளில் பூச்சிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவற்றைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மைத் தொழில்நுட்பங்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட உள்ள ஒரு நாள் பயிற்சி வகுப்பில், ஒட்டுண்ணிகள், இரை விழுங்கிகள், பூச்சிகளை அழிக்கவல்ல பாக்டீரியா, நச்சுயிரிகள் குறித்த தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இந்தப் பயிற்சியில் பயிர்ச் சாகுபடி செய்யும் உழவர்கள், பண்ணை மகளிர், வீட்டுத் தோட்டக் காய்கறி சாகுபடியாளர்கள், பெண் தொழில்முனைவோர், இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் 0422-6611414 என்ற தொலைப்பேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டு ஜூன் 20-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பயிற்சிக்கான கட்டணம் ரூ.750. பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு மதிய உணவு, சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்களுக்கு, பூச்சியியல் துறை, பயிர் பாதுகாப்பு மையத்தின் தலைவரை தொடர்பு கொள்ளலாம் எனத் தெர்வி க்கப்பட்டுள்ளது.