களை மேலாண்மை குறித்த இலவச பயிற்சி
Date December 30, 2015 Author By admin Category வேளாண்மை பயிற்சிகள்
ஜன.4-இல் களை மேலாண்மை குறித்த இலவச பயிற்சி
பயிர்களில் ஒருங்கிணைந்த களை மேலாண்மை என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் ஜனவரி 4-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் என்.அகிலா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இப் பயிற்சியில் பயிர்களில் காணப்படும் முக்கிய களைகள், அவை பரவும் விதம், ஒருங்கிணைந்த களைக் கட்டுப்பாட்டு முறைகள், உழவியல் முறையில் ஊடுபயிர் சாகுபடி, பயிர் மூடாக்கு அமைத்தல், பயிர் சுழற்சி முறையில் களைக் கட்டுப்பாடு, இயந்திர முறையில் களைகளைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து செயல்விளக்கம் செய்து காட்டப்படும். இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள், ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் நாமக்கல்-மோகனூர் சாலையில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் செயல்படும் வேளாண் அறிவியல் நிலையத்துக்கு நேரிலோ அல்லது 04286-266345, 266650 என்ற தொலைபேசி எண்ணிகளில் தொடர்பு கொண்டு ஜனவரி 3-ஆம் தேதிக்குள் பெயரை கண்டிப்பாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:தினமணி
Tags: களை மேலாண்மை குறித்த இலவச பயிற்சி