நாற்று பண்ணையாளர்கள் உரிமம் பெற வேண்டும்!
இன்று தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் நாற்று உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் பெருகி விட்டனர். குறைந்த விலைக்கு வாங்கி, தரமற்ற கன்றுகளை/நாற்றுகளை வாங்கி வந்து, அதிக விலைக்கு விற்கின்றனர்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நாற்றுப்பண்ணைகளில் பல வகைப் பழமரக் கன்றுகள், தென்னை போன்ற பல வகையான கன்றுகள் விற்கின்றனர். பலவற்றை இங்கே உற்பத்தி செய்தும், பலவற்றை இதர மாநிலங்களில் இருந்து விலைக்கு வாங்கியும் விற்கின்றனர். இவற்றின் தரத்தை விநியோகம் செய்யும் பொழுதே ஆய்வு செய்து உறுதிப்படுத்துவதன் மூலம் தரமற்ற நாற்று விற்பனையைத் தடுக்கலாம்.
இதன் ஒரு பகுதியாக நாற்று வணிகத்தை நெறிப்படுத்த அனைத்து நாற்று பண்ணை உரிமையாளர்களும் ஆகஸ்ட் 2015 இறுதிக்குள் “விதை உரிமம்” எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றார்கள். நாற்றுப் பண்ணைகள் வைத்திருப்போர் விதைகள் கட்டுப்பாட்டு ஆணை 1983-ன் படி கட்டாயமாகும். உரிமம் பெறாமல் நாற்று விற்போர் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து மேலும் விபரம் அறிய விதை ஆய்வு துணை இயக்குனர், குறளகம், இரண்டாவது மாடி, ஐகோர்ட் அருகே, சென்னை-1 என்ற முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டும். அலுவலக தொலைபேசி எண். 044 – 253 43339 ஆகும்.
மேலும் தமிழகமெங்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் விதைச்சான்று அலுவலர்கள் உள்ளனர். அதன் இயக்குனர் அலுவலகம் சென்னையில் உள்ளது. முழு விபரங்களுக்கு : இயக்குனர், (விதைச் சான்று துறை, 1424, தடாகம் சாலை ஜி.சி.டி. போஸ்ட், கோயம்புத்தூர்-13. அலைபேசி : 0422 – 243 2984, www.seedtamilnadu.com
இந்த நாற்று உற்பத்தி, விற்பனை பற்றிய முழு விபரங்கள் அறிய இத்துறையில் ஈடுபட்டு பொருளிட்ட விரும்புவோர் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் பாருங்கள்.www.tnau.gn.in, www.seednet.gn.in,www.indiaseeds.com, www.tasamb.gov.in,www.seedsinfotech.com,www.farmer.gov.in
– எம்.ஞானசேகர்,
விவசாய ஆலோசகர்,
93807 55629
நன்றி
தினமலர்