விரிஞ்சிபுரம் வேளாண் ஆராய்ச்சி மையத்தில்விவசாய நிலங்களை காட்டு பன்றிகளிடமிருந்து காக்க மருந்து கண்டுபிடிப்பு
வேலூர்: வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் வேளாண் ஆராய்ச்சி மையத்தில் விவசாய நிலங்களை பன்றிகளிடமிருந்து காப்பாற்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், பேரணாம்பட்டு, நாட்ரம்பள்ளி, திருப்பத்தூர் என மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களை காட்டுப்பன்றிகள் இரவு நேரங்களில் புகுந்து நாசப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. இதில் பகல் நேரங்களில் விவசாய நிலங்களில் வேலை செய்வதுமட்டுமின்றி இரவு நேரங்களிலும் பன்றிகள் வராமல் இருக்க காவல் இருக்க வேண்டியுள்ளதாக விவசாயிகள் புலம்புகின்றனர். மேலும் விவசாயம் செய்வதற்கு தண்ணீர் இல்லாத காலகட்டத்தில் காட்டுப்பன்றிகள் பிரச்னையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஒவ்வொரு மாதமும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் காட்டுப்பன்றியால் படும் அவஸ்தையை கொட்டிவிட்டுச் செல்கின்றனர். இதில் விவசாயிகளின் குறையை போக்கும் அளவிற்கு வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் வேளாண் ஆராய்ச்சி மையத்தில் காட்டுப்பன்றிகளை விரட்டக்கூடிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து தற்போது சோதனை முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உரிய அனுமதி பெற்ற பின்னர் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் வேளாண் ஆராய்ச்சி மையத்தில் காட்டு பன்றிகளை விரட்டக்கூடிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த மருந்து சோதனை முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
விவசாய நிலம் 1 ஏக்கர் உள்ளது என்றால் அதனைச் சுற்றிலும் ஒன்றரை அடி உயரத்தில் கயிறு கட்டி அந்த கயிற்றில் 10 அடிக்கு 50மி.லிட்டர் அளவுள்ள டப்பாக்களை கட்டிவிட்டு அதில் 4 அல்லது 5 பெரிய துளைகளை போட வேண்டும். பின்பு அதில் கண்டுபிடிக்கப்பட்ட மருந்தை ஊற்றிவிட்டால் அதன் வாடையில் காட்டு பன்றிகள் விவசாய நிலங்களுக்குள் செல்வதில்லை. இதனை ேபரணாம்பட்டு, மிட்டாளம், அணைக்கட்டு, கணியம்பாடி போன்ற பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் வைத்து கடந்த மூன்றரை மாதங்களாக சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் காட்டுப்பன்றிகள் தொல்லை குறைந்துள்ளது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மற்ற விலங்குகளும் வராமல் உள்ளதா என்று கண்காணித்து வருகின்றனர். இந்த மருந்து குறித்து ஆராய்ச்சி முழுமை பெற்ற பின்னர் உரிய அனுமதி பெற்று விற்பனை ெசய்யப்பட உள்ளது. மேலும் இந்த மருந்து விற்பனைக்கு வந்தவுடன் விவசாயிகள் காட்டு பன்றிகள் ெதால்ைலயில் இருந்து விடுபடுவார்கள் என்றனர்.dinakaran.com
We are in need of the wild boar controller medicine… please can you give us more details