ஸ்பைருலினா எனும் சுருள் பாசி வளர்ப்பு
ஸ்பைருலினா பாசி வளர்ப்பு வேகமாக பரவி வரக் காரணம் அதில் உள்ள சத்துக்கள் தான். வைட்டமின் பி12 என்ற சத்து இதில் உள்ளது.ரத்தசோகையை நீக்கும். மாத்திரை உள்ளிட்ட பல வடிவங்களில் இப்பாசி விற்பனை செய்யப்படுகிறது. இந்த பாசியைத் தூள் செய்து எலுமிச்சை பழச்சாறுடன் கலந்து குளிர்பானம் போலவும் குடிக்கலாம். இந்த பாசியைச் சேர்த்துக்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்புத்திறன் கூடும். மனிதர்களுக்கு மட்டுமல்ல, கால்நடைகளுக்கும் சிறந்த உணவாக இந்தப்பாசி பயன்படுகிறது. மாட்டுத்தீவனம் தயாரிக்கும்போது இந்தபாசியைக் கலந்து தயாரித்தால் மாடுகள் ஆரோக்கியமாக இருக்கும்.
விரைவில் பருவத்துக்கு வரும். பால் கொடுக்கும் திறனும் அதிகரிக்கும். மீன்களுக்கு கொடுக்கப்படும் தீவனத்தில் ஸ்பைருலினா பாசியைக் கலந்தால் அதன் வளர்ச்சி வேகமாக இருக்கும். அலங்கார மீன்களுக்கு கொடுத்தால் அவை பளபளவென இருக்கும். 60 முதல் 65 சதம் புரதச்சத்து உள்ள பாசி. கிலோ ஒன்றுக்கு ரூ.700 முதல் ரூ.800 வரை விலைபோகும்.
சமீபகாலம் வரை கால்நடைத் தீவனம் தயாரிப்பவர்கள் சீனாவில் இருந்துதான் இந்த பாசியை இறக்குமதி செய்துவந்தார்கள். தற்சமயம் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்திய உற்பத்திக்கு மதிப்பு கூடி இருக்கிறது. ஸ்பைருலினா பாசி விற்பனை குறித்து மேலும் தகவல்பெற
தொடர்பு முகவரி:
டாக்டர் கி.ராவணேஸ்வரன், உதவி பேராசிரியர் மற்றும் “பேராசிரியர் மற்றும் தலைவர், மீன்வள ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,மாதவரம் பால்பண்ணை காலனி, சென்னை-5. தொலைபேசி: 044-2555 6750′.
அதிக விளைச்சலுக்கு புதிய பயிர் ஊக்கிகள்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் குறைந்த செலவில் அதிக பலன் அளிக்கும் விதத்தில் “தென்னை டானிக்’ என்ற தொழில்நுட்பத்தை 2003ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. கடந்த 8 ஆண்டுகளாக உழவர்கள் பயனடைந்து வருகிறார்கள். மேலும் பயிர் வினையியல் துறையினரால் கடந்த 2009-2010, 2010-2011ஆம் ஆண்டுகளில் 5 பயிர் மேலாண்மைத்தொழில் நுட்பங்கள் வெளியிடப் பட்டது. இதில் முறையே பயறுவகைப் பயிர்களான பாசிப்பயறு, உளுந்து, துவரைக்கு “த.வே.ப.க. பயறு ஒண்டர்’, நிலக்கடலைக்கு “த.வே.ப.க. நிலக்கடலை ரிச்’; பருத்திக்கு “த.வே.ப.க.பருத்தி பிளஸ்’; கரும்பிற்கு த.வே.ப.க. கரும்பு பூஸ்டர்’, மக்காச் சோளத்திற்கு “த.வே.ப.க. மக்காச்சோள மேக்சிம்’ ஆகிய பயிர் பூஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இத்தகைய தொழில் நுட்பங்கள் அனைத்தும் குறிப்பிடப்பட்ட பயிர்களில் பல்வேறு பருவங்களில் உருவாகும் அல்லது உருவாக்கப்படும் வினையியல் குறைபாடுகளை கண்டறிந்து அவைகளின் பங்களிப்பினால் ஏற்படும் விளைச்சல் இழப்பை ஈடுகட்டி நிலைநிறுத்துவதற்காக கண்டறியப்பட்டதாகும்.
விவசாயிகள் பல்வேறு பயிர் ஊக்கிகளைப் பயிர் வினையியல் துறை மூலமாகவோ அல்லது மாவட்டம்தோறும் உள்ள வேளாண் அறிவியல் நிலையங்கள் மூலமாகவோ பெற்று பயன்படுத்தி அதிக விளைச்சலைப் பெறலாம் என தமிழ்நாடு வே.ப.கழக துணைவேந்தர் ப.முருகேசபூபதி கேட்டுக் கொள்கிறார்.
அமிர்த்த கரைசல்:
தயாரிப்பு முறை:
மாடு ஒருமுறை போட்ட சாணம், (எந்த மாடாக இருந்தாலும் பயன்படுத்தலாம்) ஒருமுறை பெய்த மூத்திரம்?இவற்றை ஒரு பிளாஸ்டிக் வாளியில் எடுத்துக் கொண்டுஅதில் ஒருகைப்பிடிவெல்லம், ஒருகுடம் தண்ணீர் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். 24 மணி நேரம் நிழற்பாங்கான இடத்தில் வைக்க வேண்டும். அமிர்த கரைசல் தயார். ஒரு பங்கு கரைசலுடன் 10 பங்கு தண்ணீர் சேர்த்து பயிர்களுக்கு தெளிக்கலாம். ஒரு ஏக்கருக்கு பத்து தெளிப்பான் (டேங்க்) அளவுக்கு தெளிக்கலாம். வாய்க்கால் நீரிலும் கலந்துவிடலாம்.
அமிர்தகரைசலை நிலத்தில் தெளித்த 24 மணி நேரத்தில் நுண்ணுயிர்கள் பெருகும். பயிர்கள் நோய்நொடி இல்லாமல் வளர உதவும். பொதுவாக 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த கரைசலைத் தெளிக்கலாம். பயிர்கள் மிகவும் வளமாகக் காணப்பட்டால் வாரம் ஒருமுறை கூடத் தெளிக்கலாம். வசதி இருந்தால் தண்ணீர் பாய்ச்சும்போதெல்லாம் அதனுடன் கலந்துவிடலாம். (தகவல்: இயற்கை வேளாண்மை, அ முதல் ஃ வரை, பொன்.செந்தில்குமார்) -டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.
கிராமத்தில் தயாராகும் உணவுக்கு ஈடான “ஸ்பைருலினா’ மாத்திரைகள்
விருதுநகர்:
விருதுநகர் அருகே தாதம்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவக்குமார், விண்வெளிக்கு செல்வோர், சாப்பாட்டிற்கு பதிலாக பயன்படுத்தும் “ஸ்பைருலினா’ மாத்திரைகளை தயாரித்து வருகிறார்.தாதம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் எஸ்.சிவகுமார். டிப்ளமோ எல்க்ட்ரானிக்ஸ் படித்த இவர், இயற்கை விஞ்ஞானியாக மாறி வருகிறார். அறிவியல் தொழில் நுட்ப முறையில், நுண்ணுயிர் உரங்களை தயாரித்து வருகிறார். அசோஸ்பைரில்லம், ரைசோபியம், அசட்டோ பேக்டர், நீலப்பச்சைப்பாசி, அசோலா போன்ற இயற்கை உரங்கள் தயாரித்து வருகிறார்.இதில் கிருமி நீக்கம் செய்ய, “ஏர் பிளோ சேம்பர், பெர்மண்டார் ஆட்டோ டைமர்’ இணைப்புடன், ஆட்டோகிளேவ் இயந்திரங்களை நிறுவி இருக்கிறார். இதில் விவசாய பல்கலைகளிடமிருந்து பெற்றுள்ள, நுண்ணுயிர்களை ஊடகக்கரைசலை பயன்படுத்தி, நொதிக்க வைத்து இயற்கை உரம் தயாரிக்கிறார். ரசாயன கலப்பு உரங்கள் பயன்படுத்தாமல், இயற்கை விவசாய முறையால் உணவு பொருள்களை உற்பத்தி செய்து வருகிறார்.
ஸ்பைருலினா கேப்சூல்: விண்வெளிக்கு செல்லும் விஞ்ஞானிகள், பல நாட்கள் அங்கு தங்கி ஆய்வு பணியில் ஈடுபடும் போது, சாப்பாட்டிற்கு பதிலாக, “ஸ்பைருலினா கேப்சூல்’கள் தான் உட்கொள்கின்றனர். இந்த “ஸ்பைருலினா’ கண்டுபிடிக்கப்பட்டதற்கான காரணம், தென் ஆப்ரிக்காவில் கடும் பஞ்சம் ஏற்பட்ட போது, மடகாஸ்கர் பகுதியில் உள்ளவர்கள், தண்ணீரை மட்டும் குடித்து உயிர் வாழ்ந்தனர். இதை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், தண்ணீரில், ஸ்பைருலினா என்ற பச்சைய பொருள் இருப்பதை கண்டனர்.
இதில் தாது உப்பு, வைட்டமின், உணவு, புரதம், மருந்து ஆகிய சத்துக்கள் உள்ளன என கண்டறியப்பட்டது. இதில் புற்று நோய், பார்வைக்கோளாறு, ரத்தக்கொதிப்பு, உடல் பருமன், தோல் நோய்கள், எலும்புருக்கி, நீரிழிவு, ரத்தசோகை, ரணம் ஆகிய அனைத்துக்கும் மருந்தாக பயன்படுகிறது.
சிவகுமார் கூறியதாவது:
நான் படித்ததற்கும், தேர்வு செய்துள்ள துறைக்கும் சம்பந்தமே இல்லை. இயற்கை விவசாயத்தில் ஈடுபாடு கொண்டு விவசாய பல்கலை வழங்கும் அனைத்து பயிற்சிகளிலும் பங்கேற்பேன். அதை செயல்படுத்தும் விதமாக, நுண்ணுயிர் உரம் தயாரிப்பு ஆய்வகத்தை உருவாக்கியுள்ளேன். அனைத்து சத்துக்களும் நிறைந்த, “ஸ்பைருலினா’ கேப்சூல் விலை 3 ரூபாய் தான், என்றார். இவரை தொடர்பு கொள்ள 95850 89677ல் ஹலோ சொல்லலாம்.
சுருள்பாசி எனப்படும் ஸ்பைருலினா உடலுக்கு தேவையான அனத்து
சத்துக்கள் நிறைந்தது இது இரத்த அழுத்த்ம்,சர்க்கரை, அல்சர்,
கேன்சர்,எய்ட்ஸ்,உடல் பருமன்,கொழுப்பு கரைத்து மேலும் பல
நோய்களை குணமாக்குகிறது மேலும் விண்வெளி ஆராய்ச்சி மேற்
கொள்பவர்கள் உணவு உட்கொள்ள இயலாது எனவே இதை கேப்சூலாக எடுத்துக் கொள்வார்கள் 1கிலோ காய்கறி பழங்களில் உள்ள சத்துக்கள் 1கிராம் ஸ்பைருலினாவில் உள்ளது
சுருள் பாசி(Spirulina) வளர்ப்பு, விற்பனை பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழ் உள்ள முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்
Address
5/25 61st street,sidco nagar,villivakkam, Chennai, India 600049
Phone : 9444622837, 9176484161, 9176484181
ஸ்பைருலினாவின் மருத்துவ குணங்கள்
கி.பி.1965 ஆம் ஆண்டில் ஆப்ரிக்கா நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது அங்கிருக்கும் மக்கள் இன்றைய சோமாலியா மக்களைப் போல மெலிந்து போயினர். இருந்தபோதிலும், சார்டு என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள் (மடகாஸ்கர் தீவு) மட்டும் பஞ்சத்தால் பாதிப்படைந்தாலும், அதன் அறிகுறிகள் அவர்களின் உடல் நலனை சிறிதும் பாதிக்கவில்லை; வெறும் தண்ணீரை அருந்தி இந்த ஆரோக்கியமான நிலையை அடைந்தி ருந்தனர். இதை ஆய்வுக்காக அங்கே சென்றிருந்த பெல்ஜியம் நாட்டு ஆய்வுக்குழுவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்களின் ஆய்வுமுடிவுப்படி, சார்டு பகுதி மக்கள் குடித்த தண்ணீரில் பெருமளவு கடல்பாசி எனப்படும் ஸ்பைருலினா கலந்திருந்தது தெரியவந்தது. அப்போது துவங்கிய ஆராய்ச்சிகள் இன்று நாம் அனைவரும் தினசரி சாப்பிட்டால், நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவாக ஐ.நா. சபை அங்கீகரிக்குமளவுக்கு உயர்ந்திருக்கிறது.
முனைவர் எம்.பாபு, 1995 ஆம் ஆண்டில் சத்துக்களும் புற்றுநோயும் தொகுப்பு 24 எஸ் 2 ; பக்கம் 197 முதல் 202 வரை. ஆய்வு மேற்கொண்ட இடம் கேரளா மாநிலம். ஆய்வு மேற்கொள்ளப் பட்டவர்கள் புகையிலை மெல்லும் பழக்கம் இருக்கும் கிராமப்புறமக்கள். இதில் ஸ்பைருலி னாவை சாப்பிடுவதால் நோயெதிர்ப்புத்திறன் மேம்பாடு 45% அளவுக்குக் கிடைத்தது.
அடுத்ததாக, டாக்டர் .V.அன்னபூரணா, 1991, தேசிய சத்துணவு ஆய்வகம், ஹைதராபாத். வெளியீடு. பயோகெம். சத்துக்கள் தொகுப்பு 10; பக்கம் 151 முதல் 165 வரை. இந்த ஆய்வில் பள்ளி செல்வதற்கு முந்தைய பருவ குழந்தைகள். தாவர உணவுகள் மற்றும் கீரை இனங்களில் இருப்பதை விட கரோட்டின் சத்து ஸ்பைருலினாவில் அதிகம் இருப்பதாக அறியப்பட்டது.
சென்னையில் எ.எம்.எம். முருகப்ப செட்டியார் ஆய்வுக்கூடத்தில் ஆய்வு செய்தவர் முனைவர் சி.வி. சேஷாத்திரி, 1993, ஆய்வு 150 நாட்கள் நடத்தினார். ஆய்வு 5000 பள்ளி சிறுவர்கள், சிறுமிகளுக்கு நாளொன்றுக்கு ஒரு ஸ்பைருலினா மாத்திரை வீதம் 150 நாட்கள் தரப்பட்டன. வைட்டமின் ஏ சத்து அபரிதமாக ஸ்பைருலினா மூலமாக அந்த பள்ளிச்சிறார்களுக்குகிடைத்தது. ஏற்பாடு இந்திய அரசு.
ஸ்பைருலினாவில் இருக்கும் சத்துக்கள் :
வேறெந்த உணவுப் பொருளையும்விட 60 முதல் 70 சதவீதம் புரதம் ஸ்பைருலினாவில் இருக்கிறது. இந்த புரதம் 90 சதவீதம் ஜீரணத் திறன் கூடியது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் நோய்களிலிருந்து மனித உடலை பாதுகாக்கிறது.
பீட்டா கரோட்டின் :
அனைத்துவிதமான புற்றுநோய் அபாயத் தினைக் குறைக்கிறது. பார்வை கூர்மையை அதிகரிப்பதுடன் உடல் சருமத்தை ஆரோக்கி யமாக பாதுகாக்க உதவுகிறது. செயற்கையான பீட்டா கரோட்டினைப் போல் இராமல், ஸ்பைருலினாவில் இயற்கையான பீட்டா கரோட்டின் இருக்கிறது.
காமாலினோலெனிக் அமிலம் :
ஸ்பைருலினாவைத் தவிர தாய்ப்பாலில் மட்டுமே இந்த அமிலம் இருக்கிறது. இந்த அமிலமானது கொழுப்புத்தேக்கம், உடல் பருமன், மூட்டுவலி போன்ற நோய்களிலிருந்து பாதுகாப் பளிக்கிறது. மேலும் மாதவிடாய்க்கு முன் தோன் றும் பிரச்னைகளின் கடுமையைக் குறைக்க உதவுகிறது.
வைட்டமின்கள் :
வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட அனைத்து வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதுவும் முழுமையாகவும் சமச் சீராகவும் நமது உடலுக்கு அதிக சக்தியளிப் பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளுக்கு உகந்தது. வைட்டமின் பி12 உள்ள ஒரே சைவ மூலப்பொருள்.
தாதுச்சத்துக்கள் :
தாதுச்சத்துக்களின்றி வைட்டமின்களின் முழுப்பயனைப் பெற இயலாது. இரும்பு, துத்த நாகம், கால்சியம், மக்னீசியம், செலினியம் உட்பட அனைத்து தாதுச்சத்துக்களையும் தன்ன கத்தே கொண்டது. ஸ்பைருலினா. இதில் இருக்கும் இரும்புச்சத்து எளிதில் ஜீரணிக்கப்படுவது டன் ஒவ்வாமை போன்ற எந்த பக்கவிளைவு மற்றது. இரத்த சோகையை அடியோடு நீக்கும். கர்ப்பிணிப் பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய ஊட்டச் சத்து உணவு ஸ்பைருலினா எனப்படும் நீலக்கடல் பாசி.
பாலிசாக்ரைடுகள் :
ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்து கிறது. எனவே, சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. உடலை தூய்மைப்படுத்தவும், விஷத் தன்மை யிலிருந்து பாதுகாக்கவும் காரணமான குளோ ரோபில் இதில் அதிகமாகக் காணப்படுகிறது.
என்சைம்கள் :
ஸ்பைருலினாவில் இருக்கும் சூப்பர் ஆக் ûஸடு டிஸ்முடேஸ் என்ற என்சைம் உடலில் ஆக்ஸிஜனேற்றத்தைத் தடுத்து, இளமைத் தோற்றத்தைக் தக்க வைக்கிறது.
பாலி அமைன்கள் :
செல் ஜவ்வை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
பலவீனமான, அமிலத்தன்மை கொண்ட உடலை ஆரோக்கியமான உடலாக மாற்றுவதற்கு உதவுகிற சிறந்த ஆல்கலின் உணவு.
80% ஆல்கலினும், 20% அமிலத்தன்மையும் சேர்ந்த சமச்சீரான உணவு. 80% ஆல்கலின் உணவு. பழங்கள், காய்கறிகள், பாசிகள் போன்றவை. 20% அமில உணவு. இறைச்சி, கடல் உணவுகள், கோதுமை போன்றவை. ஒருகிலோ ஸ்பைருலி னாவில் அடங்கியுள்ள சத்துப்பொருட்களின் அடிப்படையில் 1000 கிலோ காய்கறிகளுக்குச் சமம்.