இந்தியாவில் காய்கறி உற்பத்தி உலகளவில் 2 ம் இடத்தில் உள்ளது. சாகுபடி பரப்பு குறைவு, நுண்ணூட்டச்சத்து குறைபாடு போன்றவற்றால் காய்கறி உற்பத்தி குறைந்துள்ளது. நுண்ணூட்டச்சத்து குறைபாட்டை தடுக்க பெங்களூரு இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி கழகம் சிறப்பு நுண்ணூட்ட கலவையை கண்டுபிடித்துள்ளது. இதனை காந்திகிராம வேளாண் அறிவியல் மையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இவற்றை தக்காளி, முட்டைகோஸ், காலிபிளவர், குடைமிளகாய் பயிர்களுக்கு 5 கிராம், மிளகாய், கத்தரி, வெங்காயத்திற்கு 3 கிராம், பீன்ஸ், தட்டைபயறு, வெண்டைக்கு 2 கிராம், பீர்க்கு, பாகல், புடலை, தர்பூசணி, சுரைக்காய்க்கு ஒரு கிராம் பயன்படுத்தினால் போதும். அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், தொழில்நுட்ப வல்லுனர் செந்தில்குமார் கூறியதாவது:
நுண்ணூட்ட கலவையை இலைவழியாக தெளிக்கும்போது அனைத்து நுண்ணூட்ட சத்துகளும் பயிர்களுக்கு கிடைக்கும்.இதனால் மகசூல் அதிகரிக்கும். நடவு செய்த 30 நாட்கள் அல்லது 45 வது நாளில் தெளிக்கலாம்.அதன்பின் 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கலாம்.அவற்றை பூச்சிக்கொல்லி மருந்துடன் சேர்த்து தெளிக்க கூடாது.ஒரு கிலோ ரூ.150 க்கு தருகிறோம், என்றனர்.
தொடர்புக்கு: 04512452371