தென்னை மரங்கள் ஏற பெண்களுக்கு பயிற்சி:வழி காட்டும் விவசாய கல்லூரி
மதுரை விவசாய கல்லுாரி வேளாண் அறிவியல் மையத்தில் பெண்களுக்கு தென்னை மரங்கள் ஏறுவதற்கும், பிற இயந்திரங்களை கையாள்வதற்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.’எர்கனோமிக்ஸ்’ முறையில் கிராம பெண்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதற்காக சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. நிலக்கடலையை செடி மற்றும் காய்களை தனியாக பிரிப்பது, மக்காச்சோள விதை பிரிப்பதற்கு ஒரு நாள் இயந்திர பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுகுறித்து மையத்தின் உழவியல் துறை உதவி பேராசிரியர் பத்மநாபன் கூறியது: பெண்கள் கையாளும் வகையிலான கருவிகளுக்கு குழுவாகவும், தனியாகவும் பயிற்சி தருகிறோம். […]
Read More